Monday, November 16, 2009

கல்லூரி மாணாக்கர்களுக்கான கட்டுரைப் போட்டி.

கல்லூரி மாணாக்கர்களுக்கான கட்டுரைப் போட்டி.

அருள்திரு அம்பலவாணப் பெருமான் பேரருளால் 12 வது உலக சைவ மாநாடு வருகிற 2010 பிப்ரவரி 5,6,7 தேதிகளில் தாய்த்தமிழ்த் திருநாட்டில் கோயில் என போற்றப் பெறும் தில்லையில் நடத்திட சைவச் சான்றோர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் ஆய்வுக் கருத்து சைவத்தின் ஏழுச்சி எனச் குறிப் பிடப்பட்டுள்ளதால் தமிழகத்தினுடைய கலைக் கல்லூரி மாணவர்களிடையே அத்தகைய எழுச்சியை உண்டாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் திருமுறைகள் மற்றும் சைவ சித்தாந்தம் குறித்த கட்டுரைப் போட்டிகள் நடத்திடத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

கட்டுரைத் தலைப்புகள்.

கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பைத் தேர்வு செய்து கட்டுரை எழுதலாம் .
ஒருமாணவருக்கு ஒருதலைப்பு மட்டும்.

1.திருமுறைகள் உணர்த்தும் தொண்டும் துறவும் .
2.உலகப் பொதுமறையும் – சைவத்திருமுறையும்
3.வாழ்வியிலுக்கு வழி காட்டும் சைவத்திருமுறைகள்
4.நால்வர் காட்டும் சமூக நலப்பணி
5.சாதீயச் சிக்கல்களுக்குச் சைவம் தரும் தீர்வுகள்.
6.சிவநெறியும் அறிவியலும்
7.மெய்யியல் ஞானமும் தமிழும் .
8.சித்தாந்த நோக்கில் சிவம்.
9.சிவம் என்னும் செம்பொருள்.
10.வாழ்வியலில் வழிபாட்டில் தமிழ் .


குறிப்பு:-

1.ஒவ்வொரு கட்டுரையும் A 4 அளவு வெள்ளைத்தாளில் ஆறு பக்கங்களுக்கு மிகாமல் கணிணி அச்சு செய்து அனுப்பவேண்டும்.

2.ஒவ்வொரு கல்லூரியும் மாணவர்களிடத்திலிருந்து கட்டுரைகளைப் பெற்று அனுப்பவேண்டும்.

3.கட்டுரைகள் கட்டாயமாக த் தமிழ்மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் .

4.கட்டுரைகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 31. 12.2009.

4.கட்டுரைகள் அனுப்பவேண்டிய முகவரி .

கட்டுரைப் போட்டி அமைப்பாளர் , 12வது உலக சைவ சமய மாநாடு , பேரூர் ஆதினம், பேரூர், கோவை-10.


கட்டுரைகள் தக்க சான்றோர்களால் மதிப்பிடப்பட்டு மாநில அளவிலும் ,பல்கலைக்கழக அளவிலும் பரிசுகள் வழங்கப்பெறும். மேலும் தகுதி வாய்ந்த அனைத்துக் கட்டுரையாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் .


1.மாநில அளவில் :-

முதற் பரிசு :- ரூ. 5000/- இரண்டாம் பரிசு –ரூ. 3000/- மூன்றாம் பரிசு -ரூ. 2000/-

2.பல்கலைக்கழக அளவில் :-

முதற் பரிசு :- ரூ. 2000/- இரண்டாம் பரிசு –ரூ. 1000/- மூன்றாம் பரிசு -ரூ.500/-

No comments:

Post a Comment