Wednesday, November 18, 2009

12 ஆவது உலக சைவ மாநாடு கட்டுரைத் தலைப்புகள்

12 ஆவது உலக சைவ மாநாடு

கட்டுரைத் தலைப்புகள் :-

தொல்லியல்

1.தொல்பொருள் ஆய்வில் தொன்மைச் சிவநெறியியல்.
2.திருமுறைகளும் கல்வெட்டுக்களும்.
3.செப்பேடுகளில் சிவநெறி.
4.நடுகற்கள் சுவர்ஓவியங்களில் சிவநெறி.
5.தொல்பொருள் ஆய்வில் தொன்மைச் சிவநெறியியல்.
6.கல்வெட்டுக்காட்டும் சிவவழிபாட்டுக்கூறுகள்.

தொல்காப்பியம்.

7. தொல்காப்பியமும் முப்பொருள் உண்மையும்.
8. தொல்காப்பியர் காட்டும் இறைக்கொள்கை.
9. தொல்காப்பியரின் சிவநெறி.
10. தொல்காப்பியத்தில் சைவ சித்தாந்தக்கூறுகள்.
11. தொல்காப்பியத்தில் இறை.
12. தொல்காப்பியத்தில் உயிர்.
13. தொல்காப்பியத்தில் தளை.

சங்க இலக்கியம்.

14.சங்க இலக்கியத்தில் சிவநெறிக்கூறுகள்.
15. சங்க இலக்கியத்தில் ஆடல்வல்லான்.
16.சங்க இலக்கியத்தில் துறவுக்கொள்கை. .
17. சங்க இலக்கியத்தில் முப்பொருள் கூறுகள்
18. சங்க இலக்கியத்தில் ஐந்தொழில்கள்.
19.எட்டுத்தொகைக் காட்டும் முப்பொருளியல்.
20. பத்துப்பாட்டில் பதிப்பொருள் உண்மை.
21. திருக்குறளில் சைவ சித்தாந்தம்.
22. இலக்கியங்களில் மகளிர் துறவு (தாபதநிலை).

திருமுறைகள்

23. திருமுறைகளில் சங்கஇலக்கியத் தாக்கங்கள்.
24. திருஞானசம்பந்தர் காட்டும் முப்பொருள் உண்மைகள்.
25. பத்தாம் திருமுறையில் பதி, பசு, பாசம்.
26. திரு மந்திரம் – ஞானாமிர்த சைவ சித்தாந்த ஒப்பீடு.
27. பனிரெண்டாம் திருமுறையில் சைவ சித்தாந்தம்.
28. ஒவ்வொரு திருமுறைக்கும்- ஒவ்வொரு கட்டுரைகள்
( திருக்கோவையாரில் தனிக்கட்டுரை ஒன்று )
29. திருமுறைகள் காட்டும் எளிய வழிபாடுகள்.
30. திருமுறைகளில் மகளிர் வழிபாட்டுத் தன்மைகள்.
31. திருமுறைகளில் இம்மையே நன்மை பயக்கும் பதிகங்கள்.


பிற இலக்கியங்கள்.

காப்பியங்கள்

32. சிலப்பதிகாரத்தில் சிவநெறி.
33. மணிமேகலைக் காட்டும் சைவம்.

சிற்றிலக்கியங்கள்

34. சிவஞான முனிவர் சிற்றிலக்கியங்களில் சைவ சித்தாந்தம்.
35.கச்சியப்ப முனிவர் சிற்றிலக்கியங்களில் சைவ சித்தாந்தம்.
36. குமர குருபரர் காட்டும் சைவ சித்தாந்தம்.
37. அருணகிரிநாதர் கூறும் சித்தாந்தக்கொள்கைகள்.
38. தாயுமானவரின் சிவநெறிக்கூறுகள்.
39. சாந்தலிங்கர் நூல்களில் சித்தாந்தக்கருத்துக்கள்.
40. வள்ளலார், பாம்பன்அடிகள், தண்பாணி சுவாமிகள் காட்டும் பத்திமை நெறிகள்.

இன்றைய நிலையில் சிவ சமயம்.

1. முந்தைய உலக சைவ மாநாடுகள் பற்றிய கட்டுரைகள்.
2. தமிழகத்தில் திருமுறை பரப்பும் இயக்கங்கள்.
3. அயல் நாடுகளில் செந்தமிழ்ச் சிவநெறி இயக்கங்கள்
4. திருமடங்களில் சைவத் தமிழ்ப் பணிகள்.



மகளிர் கட்டுரைகள்

குறள் நெறியில் சேக்கிழார் காட்டும் பெண்கள்.

1. பெரியபுராணத்தில் பெண்மை நலம்,
2. திருநாவுக்கரசர் வாழ்வில் திலகவதியார்.
3. திருதொண்டு நெறியில் சிறுத்தொண்டர் மனைவி.
4. அப்பூதியடிகள் மனைவின் மாண்பு.
5. அரசி மங்கையர்க்கரசியின் திருத்தொண்டு.
6. இயற்பகைநாயனாரின் இல்லாளின் இயல்பு.
7. இளையான்குடியாரின் மனையின் திருத்தொண்டு
8. தலைவர் பணி தலைநின்ற திருவணையார் திருவெண்காட்டு நங்கை.
9. கருதரும் பெருமை நீர்மை கலிக்காமர் தேவியார்.
10. சங்க இலக்கியங்கள் காட்டும் மகளிர் வழி பாட்டு நெறி.
11. திருக்கோயில் வழிபாட்டு நெறியில் பெண்கள்.
12. வழிபாட்டில் பெண்கள் அன்றும் இன்றும்
13. திருநெறிய வழிபாட்டில் பெண்கள்.
14. மகளிரும் வேள்வியும் ,
15. இன்றைய சமுதாயத்தில் மகளிரும் ஆன்மீகமும்
16. சேக்கிழாரின், பெயர் சூட்டாப் பெண்கள்.
17. சேக்கிழாரின் அடிச்சுவட்டில் மகளிரும் ஆன்மீகமும்.
18. சேக்கிழாரைப் போற்றிய ஆசிரியர்கள்.
19. சேக்கிழாரின் பிள்ளைத் தமிழ்
20. தெய்வத்திருமறை வழித் திருமுறைப் பெண்கள்.
21. சேக்கிழார் பக்தி நெறியில் மகளிர் ,
22. மகளிர் திருத்தொண்டில் கடமை உணர்வு, உறுதி.
23. குறிக்கோள் வாழ்க்கையில் பெண்கள்’

Monday, November 16, 2009

கல்லூரி மாணாக்கர்களுக்கான கட்டுரைப் போட்டி.

கல்லூரி மாணாக்கர்களுக்கான கட்டுரைப் போட்டி.

அருள்திரு அம்பலவாணப் பெருமான் பேரருளால் 12 வது உலக சைவ மாநாடு வருகிற 2010 பிப்ரவரி 5,6,7 தேதிகளில் தாய்த்தமிழ்த் திருநாட்டில் கோயில் என போற்றப் பெறும் தில்லையில் நடத்திட சைவச் சான்றோர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் ஆய்வுக் கருத்து சைவத்தின் ஏழுச்சி எனச் குறிப் பிடப்பட்டுள்ளதால் தமிழகத்தினுடைய கலைக் கல்லூரி மாணவர்களிடையே அத்தகைய எழுச்சியை உண்டாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் திருமுறைகள் மற்றும் சைவ சித்தாந்தம் குறித்த கட்டுரைப் போட்டிகள் நடத்திடத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

கட்டுரைத் தலைப்புகள்.

கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பைத் தேர்வு செய்து கட்டுரை எழுதலாம் .
ஒருமாணவருக்கு ஒருதலைப்பு மட்டும்.

1.திருமுறைகள் உணர்த்தும் தொண்டும் துறவும் .
2.உலகப் பொதுமறையும் – சைவத்திருமுறையும்
3.வாழ்வியிலுக்கு வழி காட்டும் சைவத்திருமுறைகள்
4.நால்வர் காட்டும் சமூக நலப்பணி
5.சாதீயச் சிக்கல்களுக்குச் சைவம் தரும் தீர்வுகள்.
6.சிவநெறியும் அறிவியலும்
7.மெய்யியல் ஞானமும் தமிழும் .
8.சித்தாந்த நோக்கில் சிவம்.
9.சிவம் என்னும் செம்பொருள்.
10.வாழ்வியலில் வழிபாட்டில் தமிழ் .


குறிப்பு:-

1.ஒவ்வொரு கட்டுரையும் A 4 அளவு வெள்ளைத்தாளில் ஆறு பக்கங்களுக்கு மிகாமல் கணிணி அச்சு செய்து அனுப்பவேண்டும்.

2.ஒவ்வொரு கல்லூரியும் மாணவர்களிடத்திலிருந்து கட்டுரைகளைப் பெற்று அனுப்பவேண்டும்.

3.கட்டுரைகள் கட்டாயமாக த் தமிழ்மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் .

4.கட்டுரைகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 31. 12.2009.

4.கட்டுரைகள் அனுப்பவேண்டிய முகவரி .

கட்டுரைப் போட்டி அமைப்பாளர் , 12வது உலக சைவ சமய மாநாடு , பேரூர் ஆதினம், பேரூர், கோவை-10.


கட்டுரைகள் தக்க சான்றோர்களால் மதிப்பிடப்பட்டு மாநில அளவிலும் ,பல்கலைக்கழக அளவிலும் பரிசுகள் வழங்கப்பெறும். மேலும் தகுதி வாய்ந்த அனைத்துக் கட்டுரையாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் .


1.மாநில அளவில் :-

முதற் பரிசு :- ரூ. 5000/- இரண்டாம் பரிசு –ரூ. 3000/- மூன்றாம் பரிசு -ரூ. 2000/-

2.பல்கலைக்கழக அளவில் :-

முதற் பரிசு :- ரூ. 2000/- இரண்டாம் பரிசு –ரூ. 1000/- மூன்றாம் பரிசு -ரூ.500/-

Friday, November 13, 2009

கலந்தாய்வுக் கூட்டம்

உலக சைவ மாநாட்டுக் கலந்தாய்வுக் கூட்டம் 11.2009 அன்று திருமுருக.கிருபானந்த வாரியார் சாமிகள் சமாதி அமைந்துள்ள காங்கேயநல்லூரில் ( வேலூர் ) நடைபெற்றது.தவத்திரு. பாலமுருகனடிமை அடிகளார் அவர்களும், கலவை தவத்திரு. சச்சிதானந்த சாமிகளும், பேரூராதீனம் இளையபட்டம் தவத்திரு.மருதாசல அடிகளார் அவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சைவ சித்தாந்த மன்றத்தினர்,திருமுறை வழிபாட்டு மன்றத்தினர்,மற்றும் சிவனடியார்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.




Thursday, November 12, 2009

மாநாட்டுக் கலந்தாய்வுக் கூட்டம்

அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் இன்னருள் பெருகுக, திருவள்ளுவராண்டு 2041 தைத்திங்கள் 23,24,25, (5,6,7பிப்ரவரி 2010) ஆகிய நாட்களில் பன்னிரண்டாவது உலக சைவ மாநாடு தில்லையில் நடைபெறவுள்ளது, இம்மாநாடு சிறப்பாக அமையும் பாங்கில் ஆங்காங்கு சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டங்க்ள் கீழ்கண்ட இடங்களில் நடை பெறவுள்ளன.. அதுபோழ்து தங்களுக்கு அருகில் உள்ள இடத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதுடன் தங்களுக்குத் தெரிந்த அன்பர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுகிறோம். அந்தந்த அமைப்பின் சார்பாக கலந்து கொண்டு மாநாடு சிறக்க கருத்துக்கள் நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வேண்டுந்தங்களன்பு
இப்படிக்கு,
விழாக்குழுவினர்

நாள்
8.11.09 மாலை 6 மணி
9.11.09 மாலை 2 மணி
வாரியார் சாமிகள் ஞான வளாகம், காங்கேய நல்லுர், வேலூர்.

14.11.09 காலை 9.30 மணி, செங்குந்தர் ஆண்கள் மேனிலைப்பள்ளி,சவிதா மருத்துவமனை பேருந்து நிறுத்தம், ஈரோடு.

மாலை 3.00 மணி,தியாசபிகல் சொசைட்டி, சுகவனேசுவரர் கோயில் பின்புறம்,சேலம்.

15.11.09 காலை 9.00 மணி,செயம் மகால், சென்னைப் பாதை, விழுப்புரம்

மாலை 4.00 மணி,ஆறுமுக நாவலர் நிலையம், மாலைக்கட்டி தெரு, சிதம்பரம்

16.11.09 காலை 9.00மணி,அருள்மிகு அபிமுகேசுவரர் திருக்கோயில்
திருமண மண்டபம்,கீழ்கரை, மகாமகக் குளம், கும்பகோணம்

மாலை 3.00மணி,திருச்சி தமிழ்ச்சங்கம், மேலரண் சாலை ,திருச்சி.

Monday, November 2, 2009

உலக சைவ மாநாட்டுக் குழு

பன்னிரண்டாவது உலக சைவ மாநாட்டின் அருட்புரவலர்கள்

சீர்வளர்சீர் திருவாவடுதுறை ஆதீனம், சீர்வளர்சீர் தருமபுரம் ஆதீனம்
சீர்வளர்சீர் குன்றக்குடி ஆதீனம், சீர்வளர்சீர் மதுரை ஆதீனம்
சீர்வளர்சீர் மயிலம்பொம்மபுரம்ஆதீனம், சீர்வளர்சீர் துறையூர்திருமுதுகுன்றம் ஆதீனம்
சீர்வளர்சீர் நல்லை ஆதீனம் இலங்கை, தவத்திருபாலமுருகனடிமைஅடிகளார்,இரத்தினகிரி

அமைப்பாளர்கள்
சீர்வளர்சீர் கயிலைக்குருமணி பேரூரடிகளார்
தவத்திரு யோகானந்த அடிகள், பிரான்சு
தலைவர்
திருவண்ணாமலை ஆதீனம் சீர்வளர்சீர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

துணைத்தலைவர்கள்
பழனியாதீனம் தவத்திரு சாது சண்முக அடிகளார்
சிவத்திரு.பழ.தரும.ஆறுமுகம்
பொருளாளர்
சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர அடிகளார்

பொதுச்செயலர்
பேரூராதீனம் தவத்திரு மருதாசல அடிகளார்
இணைச்செயலர்
சிதம்பரம் மௌனத்திருமடம் தவத்திரு மௌன சுந்தரமூர்த்தி அடிகளார்

துணைச்செயலர்கள்
சிவத்திரு.ந.இரா.சென்னியப்பனார், பேரூர்
மரு.திருமதி.பத்மினி கபாலிமூர்த்தி, தில்லை
சிவத்திரு.முருகு.இராமலிங்கம் சென்னை
உறுப்பினர்கள்
சிவத்திரு.ப.மூக்கப்பிள்ளை, திருச்சி, சிவத்திரு.மணிமொழியன், மதுரை
சிவத்திரு.இரா.வசந்தகுமார்,கோவை, சிவத்திரு.சதானந்தம், சென்னை
சிவத்திரு.ஆ.பக்தவத்சலம்,குடியாத்தம், சிவத்திரு.திருநாவுக்கரசு,ஈரோடு
சிவத்திரு.வி.பி.எம்.எம்.சங்கர். திருவில்லிப்புத்தூர்